-மாற்று அணிக்கு தலைமை ஏற்க பா.ம.க. தயார்: ராமதாஸ்
-4வது முறையாக காங்கிரஸ் தலைவராகிறார் சோனியா
-ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் ரத்து
-பெங்களூரில் சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து
-அக்.27ல் துணை ஜனாதிபதி மதுரை வருகை
-திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை உடைப்பு
-சூப்பர் பக் கிருமி ஆய்வு நடத்திய டாக்டர்களுக்கு நோட்டீஸ்
-தமிழகத்தில் 5.6 லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன்: சிதம்பரம்
-ஊக்க மருந்து புகார்: 4 மல்யுத்த வீரர்கள் நீக்கம்
-பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட்: ஐ.சி.சி. அதிரடி
|
புதிய வெளியீடுகள்
சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது.
அம்மையும், அப்பனும் கலந்த ஒரு திருவுருவில் அம்மையப்பனாய் இறைவன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரில் எழுந்தருளி நிற்கும் சிறப்பு உலகிலேயே வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும். சிவதலமும், திருமால் தலமும் ஒன்றாய் அமைந்து விளங்கும் இத்திருத்தலமானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது.
தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் முதல்படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திகழ்கிறது. மதுரையிலிருந்து தெற்கே திருமங்கலம் செல்லும் சாலையில், 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம் மலை. சுமார் 300 மீட்டர் உயரமுள்ள இம் மலையில் அடிவாரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. திருநெல்வேலி ஜங்சனிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில். ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது.
கொல்லி மலை தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழல் மற்றும் மலேரியா உள்ளிட்ட பல நோய் தாக்குதல் பரவலாக இருந்ததன் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது.
பழந் தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கருதப்படுகின்ற ஆறு கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அவை அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன். இவற்றுள் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவது திருச்செந்தூர் ஆகும். இது திருச்சீரலைவாய் எனவும் அழைக்கப்படும்.
வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டது. இங்கு திருவாரூர் கோயில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு உள்ளது. இதன் அடிப்பகுதி 25 x 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள முண்டன்துறை புலிகள் சரணாலயமாகும். திருநெல்வேலியில் இருந்து சுமார் 56 கி.மீ தூரத்தில் முண்டன்துறை வனவிலங்கு சரணாலயம் உள்ளது. சுமார் 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள ரயில் நிலையம் நெல்லை-தென்காசி ரயில் பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம் ஆகும்.
இணைய பக்க முகவரி:
http://www.inbasutrula.com/index.html