தமிழக சுற்றுலா தலங்கள் | ||||||
கொல்லி மலை ... தொடர்ச்சி ...
ஆகாய கங்கை அருவிகொல்லி மலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்நீர் வீழ்ச்சியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை அடைய சுமார் 760 படிகட்டுகள் கீழிறங்கிச் செல்ல வேண்டும். படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. முருகன் கோவில் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.
வியூ பாயிண்ட்சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் வியூ பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. வல்வில் ஓரி விழா செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) 'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீதுள்ள 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது. வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது.
வாசலூர்பட்டி படகுத் துறைதமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும் அன்னாசி பழ ஆராய்ச்சி பண்ணை ஒன்றும் இங்கு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. கொல்லி மலையில் அதிகளவில் அபூர்வ மூலிகைகள் கிடைக்கின்றன. சித்த வைத்தியத்திற்கு இந்த மூலிகைகள் பெரிதும் உதவுகின்றன. இம்மலையில் சித்தர்கள் பலர் வாழ்ந்து, நோய் தீர்க்கும் மருந்துகளை கண்டறிந்து கொடுத்துள்ளனர். கொல்லை மலையில் பல சரக்குகளை விற்கும் சந்தை வாரந்தோறும் நடக்கிறது.
|
|
|