தமிழக சுற்றுலா தலங்கள் | ||||||
அண்ணா சதுக்கம் ![]()
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவருமான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் சமாதி அமைந்துள்ள இடம் தான் அண்ணா சதுக்கம் என்று அழைக்கப்படுகிறது. இச்சதுக்கம் சென்னையில் மெரினா கடற்கரையில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இச்சதுக்கத்தின் முகப்பில் இரு யானைத் தந்தம் போன்ற அமைப்பு உள்ளது. சமாதியின் அருகில் நினைவுத் தூணும், அணையா விளக்கும் உள்ளது. பின்பகுதியில் அண்ணா நினைவு அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது.அண்ணாவின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், அனைத்து கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் திரளாக வந்து மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு அண்ணனுக்கு அஞ்சலி செலுத்துவதை தங்கள் கடமையாகக் கொண்டுள்ளனர்.
|
|
|