தமிழக சுற்றுலா தலங்கள் | ||||||
வள்ளுவர் கோட்டம் ... தொடர்ச்சி ...
அரங்கம் இங்குள்ள அரங்கம் 220 அடி (67 மீட்டர்) நீளமும், 100 அடி (30.5 மீட்டர்) அகலமும் கொண்டது. 4000 மக்களைக் கொள்ளக்கூடியது. இவ்வரங்கத்தின் வெளிப்புறமாக 20 அடி (6 மீட்டர்) அகலம் கொண்ட தாழ்வாரங்கள் உள்ளன. இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறள் மணிமாடம் என அழைக்கப்படுகின்றது. திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும், கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் உள்ளன. ![]() ![]() வேயாமாடம் அரங்கத்தின் கூரைத்தளம் வேயாமாடம் எனப்படுகின்றது. இவ் வேயாமாடத்துக்குச் செல்வதற்கு அரங்கத்தில் வாயிலுக்கு அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இத் தளத்திலிருந்து, கருவறையை அணுக முடியும். இங்கேயிருந்து சில படிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம். இத் தளத்திலிருந்து கருவறை மேல் அமைந்த கோபுரத்தையும் கலசத்தையும் அண்மையிலிருந்து பார்ப்பதற்கு இத் தளம் வசதியாக உள்ளது. அத்துடன், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பூங்காவின் அழகையும் இங்கிருந்து பார்த்து ரசிக்கமுடியும். ![]() சுற்றாடல் இக் கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதியில், பூஞ்செடிகளும், வேறு பல அழகூட்டும், நிழல்தரும் மரங்களும் நடப்பட்டுப் பூங்காவாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக தமிழக புராதன சின்னங்கள் அட்டவணை
தமிழக சுற்றுலா தலங்கள் அட்டவணை இந்திய சுற்றுலா தலங்கள் அட்டவணை
|
|
|