தமிழக சுற்றுலா தலங்கள் | ||||||
அருள்மிகு கபாலீஸ்வரர் கோவில் தமிழ் நாட்டின் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள் திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயம் மிகவும் முக்கியமானதாகும். கோவிலில் உறைந்திருக்கும் ஈஸ்வரர் கபாலீஸ்வரர். சக்தி இங்கு கற்பகாம்பாள் எனும் பெயர் கொண்டு எழுந்தருளியுள்ளார். சந்நிதிகள் கபாலீஸ்வரர் கோவிலின் நுழைவு வாயிலின் வலப்புறம் விநாயகர் சந்நிதி உள்ளது. கோவிலினுள் வலப்புறத்தில் வள்ளி தெய்வயானையுடன் ஆறுமுக சுவாமி சந்நிதியும், கபாலீஸ்வரர் கருவறைக்கு வடக்கே தெற்கு நோக்கி நடராஜர் சந்நிதியும், நடராஜர் சந்நிதிக்கு எதிரில் கபாலீஸ்வரர் கருவறைக்கு வடக்கு வெளிச் சுவரில் துர்க்கை சந்நிதியும் அதையடுத்து, பிரமதேவர் உருவமும் உள்ளது. அடுத்தாற் போல் சண்டிகேசுவரர் சந்நிதியும், கபாலீஸ்வரர் கருவறை பிரகாரத்தில் சந்திரசேகரர், அறுபத்துமூவர், தொகையடியார் ஒன்பது பேர்கள், சிவநேசர், அங்கம் பூம்பாவை உலாத் திருமேனி ஆகியவை வரிசையாக உள்ளன. கபாலீஸ்வரர் சந்நிதிக்கு வெளிப்புறம் தெற்கு நோக்கி கற்பகாம்பாள் சந்நிதி இருக்கிறது. கற்பகாம்பாள் சந்நிதிக்கு தெற்குப்புறத் தூணில் இராமர், இலட்சுமணர், சீதை, அனுமன் ஆகியோர் திருவுருவங்கள் உள்ள தூண் உள்ளது. மேலும் விபரங்களுக்கு அருள்மிகு கபாலீஸ்வரர் கோவில் மயிலாப்பூர், சென்னை - 600 004. தொலைபேசி : +91-44-24941670 மின்னஞ்சள் :
முருகன் கோவில்கள் அட்டவணை
தமிழக கோவில்கள் அட்டவணை தமிழக சுற்றுலா தலங்கள் அட்டவணை இந்திய சுற்றுலா தலங்கள் அட்டவணை
|
|
|