http://www.inbasutrula.com
சுவையான சுற்றுலா
இணைய தளம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
தமிழக சுற்றுலா தலங்கள்




அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்

... தொடர்ச்சி ...

     மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

அஷ்டசக்தி மண்டபம்
     அம்மன் சன்னிதியின் முன்பகுதி. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களிடையே மீனாட்சி கல்யாணம் கதைவடிவில் காட்சியளிக்கிறது. உள்ளிருக்கும் 8 பெருந்தூண்களிலும் அஷ்டசக்திகளின் சிலைகள் அழகுசெய்கின்றன. திருவிளையாடல் புராணக் காட்சிகள் நிறைந்த இம்மண்டபத்தில் மீனாட்சி, சமயக்குரவர், துவாரபாலகர், விநாயகர் மற்றும் சுப்ரமணியர் சிலைகளும் உள்ளன.

மீனாட்சி நாயக்கன் மண்டபம்
     மேலே யாளியும், கீழே சிறுசிற்பங்களும் நிறைந்த ஆறுவரிசைத் தூண்கள் இம்மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இம்மண்டபத்தையும், அஷ்டசக்தி மண்டபத்தையும் இணைக்கும் சிறுமண்டபத்தையும் வேடன், வேட்டுவச்சி சிலைகள் உள்ளன. மண்டபத்தின் மேற்குக் கோடியில் ஆயிரத்தெட்டு சிறு விளக்குகளைக் கொண்ட பித்தளையில் ஆன திருவாட்சி கண்களை கவர்கிறது. முதலிப்பிள்ளை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், கம்பத்தடி மண்டபம் ஆகியவையும் காண வேண்டியவை.

பொற்றாமரைக் குளம்
     உலகப் பொதுமறை திருக்குறள் இங்கு வைத்துத்தான் சங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்கிறது வரலாறு. குளம், நீண்ட சதுர வடிவில், அழகிய படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. வடக்குக் கரையிலுள்ள தூண்களில் சங்கப்புலவர்கள் 24 பேர்களின் சிலைகளைக் காணலாம். இரு தூண்களில் கோயிலை முதன்முதலில் கண்ட தனஞ்சயன் என்னும் வணிகனும், கோயிலையும், நகரையும் நிர்மாணித்த குலசேகரப் பாண்டியனும் காட்சியளிக்கின்றனர். சுவற்றில் திருவிளையாடற் புராணக் காட்சிகள் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.

     கிழக்குக் கரையில் நின்றுபார்த்தால் சுவாமி, அம்மன் கோயில்களின் தங்க விமானங்களைத் தரிசிக்கலாம். தெற்குக்கரை மண்டபச் சுவற்றில் திருக்குறள் முழுவதும் வெண்சலவைக் கற்களில் பதிக்கப் பெற்றுள்ளது.

மீனாட்சி அம்மன் சன்னிதி
     அம்மன் கோயிலுக்கு இரு பிரகாரங்கள் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் தங்கக் கொடிமரம், திருமலை நாயக்கர் மண்டபம், விநாயகர், கூடற்குமரர் சன்னிதிகள், செம்பால் ஆன இருபெரும் துவாரபாலகர்கள் ஆகியவை உள்ளன. கூடற்குமரர் சன்னிதியில் அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஆறுகால் பீடத்தில்தான் குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றப்பட்டது. இதன் வாயிலாக அம்மன் கோயில் மகாமண்டபத்தை அடையலாம்.

சுந்தரேஸ்வரர் சன்னிதி
     சன்னிதிக்கு இருபுறமும் 12 அடி உயரமுள்ள துவாரபாலகர்கள் நிற்கின்றனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் சிறு உருவங்களையும் காணலாம். உள்ளே முதல் பிரகாரத்தில் திருவிளையாடற் புராணம் அரங்கேற்றப்பட்ட ஆறுகால் பீடம் இருக்கிறது. அதில் செப்பால் ஆன துவாரபாலகர் சிலைகள் உள்ளன. சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார்களையும், கலைமகள் கோயிலையும் காணலாம். உற்சவ மூர்த்தி, காசி விசுவநாதர், பிட்சாடனர், சித்தர், துர்க்கை ஆகியோர் சன்னிதிகளும் உள்ளன. தல விருட்சமான கடம்ப மரம், கனகசபை, யாகசாலை, இரத்தின சபை, சாட்சி கூறிய வன்னி கிணறு ஆகியவையும் இந்தப் பிரகாரத்தில் இருக்கின்றன.

     தவிர, சித்திரக் கோபுரம், வேம்பத்தூர் கோபுரம், நடுக்கட்டுக் கோபுரம், இடபக்குறியிட்ட கோபுரம் முதலான பல சிறிய கோபுரங்களும் சிறப்பானவை. வடக்கு ஆடிவீதியில், பெரிய கோபுரத்தை அடுத்து ஐந்து இசைத்தூண்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 22 சிறு தூண்களைக் கொண்டது. தட்டினால் விதவிதமான இன்னிசை எழுப்புகின்றன இந்த அதிசயத் தூண்கள்.

புது மண்டபம்
     கோயிலுக்கு வெளியே, கிழக்குக் கோபுரத்துக்கு எதிரில் வசந்த மண்டபம் என்னும் புது மண்டபம் உள்ளது. தடாதகை, மீனாட்சி கல்யாணம் , திருவிளையாடற் புராணம் போன்றவை அழகிய சிற்பங்களாக உள்ளன.கரும்பு தின்னும் கல்யானை, இராவணன் கயிலையைத் தூக்குவதும் சிற்பக்கலையின் சிறப்புக்கு சான்றுகள்.




இணைய பக்க முகவரி: http://www.inbasutrula.com/tn/temples/meenakshisundareswarartemple2.html





ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs