தமிழக சுற்றுலா தலங்கள் | ||||||
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம், பழனி ... தொடர்ச்சி ... ![]() திருஆவினன்குடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவிலின் பெயர் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் ஆகும். இந்த இடத்தின் பெயர் திரு ஆவினன்குடியாகும். இக்கோவிலே உண்மையில் மூன்றாவது படைவீடாகும். இக்கோவிலுடன் இணைந்து ஒரு குளம் உள்ளது. முருகனின் பழமையான கோவில் திருஆவினன்குடி ஆகும். இங்கு முருகன் நெல்லி மர நிழலில் கோவில் கொண்டுள்ளார். இங்கு முருகன் குழந்தையாக மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். முருகன் ஒரு அரசரைப் போல் உயரமான கருவரையில் உள்ளார். அதனால் பக்தர்கள் அவரை மிகவும் நன்றாக காண முடியும். இங்கு பிரதான கோவில், நெல்லி மரம், நாகலிங்கப் பூ மற்றும் அருணகிரிநாதர் ஆலயம் ஆகியவை தரிசிக்க வேண்டியவை ஆகும். திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவில், சண்முகாநதி கோவில்கள், இடும்பன் மலை, விஷ்ணு கோவில், பட விநாயகர் கோவில், மலையைச் சுற்றியுள்ள 108 விநாயகர் கோவில்கள், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில், கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள வேலப்பர் கோவில் ஆகிய கோவில்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டவை ஆகும். மலையில் இரவு தங்குதல் பழனி மலையில் இரவு தங்குவதற்கு ஆண்டு முழுவதும் யாரும் எப்போதும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் ஒவ்வோர் ஆண்டும் ஒரே ஒரு நாள் மட்டும் சேலம் மாவட்டம் இடைப்பாடி நகரைச் சேர்ந்த பர்வதராஜகுலத்தைச் (மீனவர்) சேர்ந்த மக்கள் இரவு தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பல நூறு ஆண்டுகளாக (சுமார் 300) பரம்பரை பரம்பரையாக இந்த வழக்கம் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தை மாதம் தைப்பூசம் முடிவுற்ற பிறகு இச்சமுதாயத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பழனிக்கு காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வருகிறார்கள். அதே நாளில் இச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சேலம், கும்பகோணம், தாரமங்கலம், சென்னை, தஞ்சாவூர், கடலூர் மற்றும் தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்தும் காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வந்து சேர்கிறார்கள். இந்த நடைப்பயணத்தின் போது பர்வதராஜகுல சமுகத்தினரோடு மற்ற சமுகத்தினரும் நடைப்பயணம் மேற்கொண்டு முருகனை தரிசிக்க வருகிறார்கள். நடைப்பயணத்தின் போது பர்வதராஜகுல அன்னதான கமிட்டி மூலம் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோருக்கும், அனைத்து தினங்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆகவே அனைத்து சமூகத்தினரும் பர்வதராஜகுல சமூகத்தினரோடு இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டு முருகனை தரிசித்து பழனி மலையில் இரவில் தங்கி இறைவன் அருள் பெற்று இன்பமடைகின்றனர். பூஜைகள் முருகனுக்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு முருகன் விஸ்வரூப தரிசனம் அளிக்கிறார். காலை 7.15 மணிக்கு விழாபூஜை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சையும், இரவு 8 மணிக்கு ராக்கால பூஜையும் நடைபெறுகிறது.
முருகன் கோவில்கள் அட்டவணை
தமிழக கோவில்கள் அட்டவணை தமிழக சுற்றுலா தலங்கள் அட்டவணை இந்திய சுற்றுலா தலங்கள் அட்டவணை
|
|
|