http://www.inbasutrula.com
சுவையான சுற்றுலா
இணைய தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழக சுற்றுலா தலங்கள்



அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம், பழனி

... தொடர்ச்சி ...

தங்கரதம்
     ஒவ்வொரு கிருத்திகை தினத்தன்றும் மற்றும் விசேஷ நாட்களிலும் இரவு 7 மணிக்கு மலையில் கோவில் பிரகாரத்தைச் சுற்றி தங்கரதம், நாதஸ்வரம், திருப்புகழ் இசை மற்றும் கோவில் பரிவாரங்களுடன் வலம் வருகிறது. பக்தர்களும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கரதம் இழுக்கிறார்கள். தங்கரதம் இழுக்க கிருத்திகை தினங்களில் ரூ. 2000மும் மற்ற சாதாரண நாட்களில் ரூ.1500மும் கட்டணம் செலுத்த வேண்டும். இக்கட்டணம் மாலை 4.30 மணிக்குள் தேவஸ்தான அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். தைப்பூசம், பங்குனி உத்திரம், தசரா பண்டிகையின் பத்து நாட்கள், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் தங்கரதம் வலம் இல்லை. மயில் வாகனத்தில் முருகன் பவனி வர கட்டணம் ரூ. 300 ஆகும்.

விழாக்கள்
     பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முக்கியமானவையாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் பிற பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன.

காவடி மற்றும் நடைப்பயணம்
     பக்தர்கள் காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டடு வந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பான வழக்கமாகும். லட்சக்கணக்கானோர் தைப்பூசத் திருநாளன்று காவடிகட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வந்து முருகனை தரிசிக்கின்றனர்.

அன்னதானம்
     கோவிலில் தினமும் மதியம் 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ. 25000 செலுத்தினால் அந்தப் பணத்தை முதலிடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் பக்தர்கள் விரும்பும் தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பெயரில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

வின்ச் சேவை
     1966 ஆண்டு தேவஸ்தானம் 22 டன் எடை இழுக்கும் திறன் கொண்ட வின்ச் சேவையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் 36 பயணிகள் பிரயாணம் செய்ய முடியும். இது 290 மீட்டர் (960 அடி) நீள ரயில் பாதையில் இழுக்கப்படுகிறது. மலையின் உயரம் 136 மீட்டர் (450 அடி) ஆகும். பிரயாண நேரும் 480 விநாடிகள் ஆகும். தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. தற்சமயம் 3 பாதைகளில் வின்ச்கள் இயக்கப்படுகின்றன. கிருத்திகை மற்றும் பிற விழா நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 10 மற்றும் 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் ரூ. 5 ஆகும்.

ரோப் கார்
     தற்போது மலைக்கு செல்ல ரோப் கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சில விநாடிகளில் மலை உச்சிக்கு சென்று விட முடியும். இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 15 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு
இணை ஆணையர்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம் அலுவலகம்
அடிவாரம், பழனி - 624 601.
தொலைபேசி: +91-4545-241417 / 242236




இணைய பக்க முகவரி: http://www.inbasutrula.com/tn/temples/palani3.html




ஆன்மீகம்
தினசரி தியானம்





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs